Friday, November 27, 2015

நிமிடங்கள்...

காலைகதிரவன் சுளீரென  ஒளியால் 
என் கண்களை கூச 
என் கைகளின் தழுவலில் 
என் கைபேசி கிடைக்க ...
ஸ்க்ரீன் சேவரில் உன் முகம் காண 
என் கருவிழிகள் போட்டியிட ...
உனக்கான அனைத்து முத்தங்களையும் 
கைபேசி வாங்கிக் கொள்கிறான் 
கவனித்துகொள் ....!!!
காமத்தை ஆட்டிவைப்பது அறிவு ..
காதலை வழிநடத்துவது உணர்வு ...
உன்னை நினைத்து நினைத்து உருக சொன்ன உணர்வு ..
உன்னை காதலிக்க கற்றுத்தந்த உணர்வு ..
உன்னை அரவணைக்க கற்றுத்தந்த  உணர்வு ..
உன்னை மன்னிக்க கற்றுத்தந்த  உணர்வு ..
உன் கோவத்தை மறக்க கற்றுத்தந்த  உணர்வு ..
உறவுப்பாலமாய் அமைந்திருக்கும் உணர்வு ..
கட்டியணைக்க... தோளில் சாய... 
கைகள் கோர்க்க...
மழையை ரசிக்க ... கவிதை பேச...
நான்கு விழியும் காதலால் இனைய..

அற்புதம்  தான் இந்த  காதல் .. 
வலிகள் தந்தாலும்  ...காதலை கூடசெய்த "உணர்வு "..

நாட்கள் இல்லை... மாதங்கள் இல்லை ...
யுகங்கள் போல் ஆனது நொடிகள்...

உன்னை காண .. 
கட்டியணைக்க ...
காதல் கொள்ள ...
நம் கண்மணியை காண.. 
கட்டியணைக்க 
நம் காதலை பாராட்ட ...

வார்த்தைகள் தேடுகிறேன் உன் பிரிவை வெளிப்படுத்த ...

No comments: